கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

தி.ரா.அருள்ராஜன்

மென்தா ஆயில், குறுகிய காலத்தில் மிகப் பெரிய நகர்வுகளைக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். டிசம்பர் 2017-ல் வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சமாக 2018-ஐ தொட்டது. இந்தப் பலமான ஏற்றத்திற்குப்பிறகு, படிப்படியாக இறங்கி, ஒரு பலமான இறக்கத்திற்கு வழிவகுத்தது.

இந்த இறக்கம் செப்டம்பர் 2018 வரை தொடர்ந்தது. கீழே குறைந்தபட்ச புள்ளியாக 1111-ஐ தொட்டது.  கிட்டத்தட்ட பாதி விலைக்கு இறங்கியது.  அதன்பின், மீண்டும் ஏற்றப் பாதையில் தொடர்ந்து ஏற ஆரம்பித்தது.  செப்டம்பர் 2018-ல் அதிகபட்ச புள்ளியாக 1837 என்ற புள்ளியைத் தொட்டது. ஆக, மென்தா ஆயில் என்பது ஒரு ரோலர்கோஸ்டர் ஏற்ற இறக்கங்களை எல்லாக் காலகட்டத்திலும் கொண்டிருந்தது. அது தற்போதும் விதி விலக்கல்ல. 

டெக்னிக்கல் அனாலிசிஸ்படி, பார்க்கும்போது 29.09.201 -8ல் உச்சமாக 1832 என்ற புள்ளியைத் தொட்டு இறங்கியபின், 10.09.2018 அன்று அதே புள்ளிகளுக்கு அருகில் சென்று, சற்றே தாண்டி 1837 என்ற அதிகபட்ச புள்ளியைத் தொட்டது. அதன்பின், இறங்க ஆரம்பித்தது. இதைத்தான் ‘டபுள்டாப்’ என்று அழைப்போம். இந்த உருவமைப்பு, ஏற்றம் முடிந்து இறக்க ஆரம்பிப்பதைக் காட்டும் அறிகுறி ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick