நாணயம் QUIZ | Nanayam Quiz - Nanayam Vikatan | நாணயம் விகடன்

நாணயம் QUIZ

நிதி அறிவு

பொருளாதாரம், பங்குச் சந்தை, வருமான வரி தொடர்பான கேள்விகளையும் அவற்றுக்கு மூன்று பதில்களையும் தந்துள்ளோம். சரியான பதிலுக்கு 10 மார்க் என மொத்தம் 100 மார்க்.  இதில் 60-70 மார்க்கை நீங்கள் எடுத்தால், உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்.

1.  இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பு என்கிற ஆம்ஃபி-யின் சேர்மன் யார்?

    அ. ஏ.பாலசுப்பிரமணியன்     ஆ. சங்கரன் நரேன்
    இ. அஜய் தியாகி

2. பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்

    அ. ஆடம் ஸ்மித்    ஆ. சுர்ஜித் படேல்     இ. ரகுராம் ராஜன்

3. பங்கு முதலீட்டில் டெக்னிக்கல் அனாலிசிஸ் என்பது என்ன?

    அ. குறிப்பிட்ட நிறுவனப் பங்கின் விலைப்போக்கை ஆராய்வது
    இ. நிறுவனத்தின் தொழில்நுட்பத் திறனை பகுப்பாய்வு செய்வது
    இ. நிறுவனர்களின் திறனை ஆய்வு செய்வது

4. எஸ்டேட் பிளானிங் என்பது என்ன?

    அ. ரியல் எஸ்டேட் சொத்தினைக் குடும்பத்தினருக்குப் பிரித்தளிப்பது
    ஆ. மலைவாஸ்தலத்தில் எஸ்டேட் வாங்கத் திட்டமிடுவது
    இ. தனக்குப்பிறகு தன் சொத்தை குடும்ப உறுப்பினர்கள் எப்படிப் பிரித்துக்கொள்ள வேண்டும் என உயில் எழுதி வைப்பது

5.   60 வயதுக்கு உட்பட்ட ஒருவரின் வருமானம், நிதியாண்டில் எந்தத் தொகைக்கு மேல் சென்றால் வருமான வரி கட்ட வேண்டியிருக்கும்?

    அ. ரூ.2.5 லட்சம்    ஆ. ரூ.5 லட்சம்
    இ. ரூ.3 லட்சம்

6.     ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்ட் என்பது என்ன?

    அ. முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி, கடன் சார்ந்த மற்றும் பங்கு சார்ந்த திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யப்படுவது
    ஆ. பல்வேறு கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது
    இ. அரசுக் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick