நிதிக் கல்வி... இளைய தலைமுறையின் உடனடித் தேவை! | Financial education - the immediate need of the younger generation - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (30/09/2018)

நிதிக் கல்வி... இளைய தலைமுறையின் உடனடித் தேவை!

நிதிக் கல்வி

வீட்டில் நம் பெற்றோரும், பள்ளியில் நமது ஆசிரியர்களும், சமூகத்தில் நமது பெரியோர்களும் நமக்கு சொல்லித் தராத ஒரு பாடம் என்றால் அது பணத்தைக் கையாளும் நிதிக் கல்விதான். பல தவறுகளைச் செய்து, சம்பாதித்தையெல்லாம் தொலைத்துக் கற்றுக்கொண்ட அந்தப் பாடத்தை, அடுத்த தலைமுறைக்காவது நாம் அவசியம் கற்றுத் தரவேண்டும்.

சாதி, மதம், அரசியல் எனப் பல விஷயங்களை டீன் ஏஜ் குழந்தைகளிடம் பேசத் தயங்காத பெற்றோர்கூட, பணம் மற்றும் அதைக் கையாளும் விதம் பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. இதற்குக் காரணம், நாமே பணம் பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான். 45 வயதில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒரு அப்பாவுக்கு, 15% தள்ளி எடுத்த சீட்டுப் பணத்தை வங்கி எஃப்.டி-யில் போட்டு வைக்கக்கூடாது என்பது தெரியவில்லை. கணவர் தரும் வீட்டுச் செலவில் கொஞ்சம் கொஞ்சமாக மிச்சம் பிடித்து, குந்துமணி அளவுக்காவது தங்கம் வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கும் அம்மாவுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கம் விலை பெரிய லாபம் தந்துவிடவில்லை எனத் தெரியவில்லை. தவிர, தப்பாக எதுவும் சொல்லித் தந்துவிடுவோமோ என்கிற அச்சமும் அவர்களிடம் இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க