இரண்டாவது இடத்தில் தமிழகம்....சில்லறைக் கடன் வாங்குவது அதிகரிப்பது ஏன்?

கடன்

ந்தியாவின் மொத்த சில்லறைக் கடன்களில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் மட்டும் 40% அளவிற்கு வாங்கப்பட்டுள்ளதாக தற்போது வந்துள்ள புள்ளிவிவரம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. கடன் பெற்றவர்களின் எண்ணிக்கையை வைத்து  ஒப்பிடும்போது, 32% பேர் இந்த மூன்று மாநிலங்களிலிருந்து கடன் பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் ரூ. 2,77,400  கோடி, கர்நாடகாவில் ரூ.2,74,900 கோடி உள்பட இந்தியாவிலுள்ள பத்து பெரிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வாங்கியுள்ள கடன் தொகை ரூ.21,27,400 கோடியாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நகர்ப்புற விரிவாக்கம் காரணமாக சில்லறை விற்பனை வளர்ச்சியடைந்துள்ளதால், கடன் வாங்குவோரின் அதிகரித்திருப்பதாக ட்ரான்ஸ்யூனியன் சிபில் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் கடன் வாங்கும் போக்கு அதிகரித்திருப்பது ஏன், இதனைக் கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டும் என்பது குறித்து நிதி ஆலோசகர் அபுபக்கர் சித்திக்கிடம் கேட்டோம்.
“சில்லறைக் கடன்கள் எனப்படுவது வீட்டுக் கடன், வாகனக் கடன், பர்சனல் லோன், கிரெடிட் கார்டு லோன், கல்விக் கடன், வீட்டு உபயோகப்பொருள்களுக்காக வாங்கும் லோன் போன்றவற்றைக் குறிக்கும். மொபைல், உடைகள், காலணிகள் எனப் பலவற்றிற்கும் தற்போது கடன் தரப்படுகிறது. தற்போது கடன் வாங்குவது மிகவும் எளிமையாகி இருப்பதால், பலருக்கும் கடன் வாங்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா போன்ற மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது. தொழில்வளம் நிறைய இருப்பதால், வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும், இங்கே கடன் வாங்கி திரும்பச் செலுத்தாதவர்கள் குறித்த புகார்கள் குறைவாக இருப்பதால், எளிதில் கடன் கிடைக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்