ட்விட்டர் சர்வே: சில்லறைக் கடனில் தமிழகம்: முன்னணியில் இருப்பது ஏன்? | Nanayam Twitter Survey - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ட்விட்டர் சர்வே: சில்லறைக் கடனில் தமிழகம்: முன்னணியில் இருப்பது ஏன்?

சில்லறைக் கடன் (Retail Loan) வாங்குவதில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். தமிழகத்தில் மட்டும் ரூ.2.77 லட்சம் கோடி சில்லறைக் கடனாக வாங்கப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு கேள்வி கேட்டிருந்தோம்.

நிதித் திட்டமிடல் இல்லாததே சில்லறைக் கடன்கள் வாங்குவதற்கு முக்கியக் காரணம் என 53% பேர் சொல்லி யிருக்கின்றனர். இது கன்ஸ்யூமர் யுகம். எல்லாப் பொருள்களையும் வாங்கி அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறபோது பலரும் எளிதில் கடைப்பிடிக்கும் வழி இ.எம்.ஐ எனப்படும் மாதாந்திர தவணைத் திட்டம்தான்.  இ.எம்.ஐ மூலம் கடன் வாங்கும்போது, கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை வட்டியாகக் கட்டி இழக்கின்றனர். முன்கூட்டியே பணம் சேர்த்து, பொருளை வாங்குவதன்மூலம் வட்டியாகக் கட்டும் பணம் மிச்சமாகும். இதற்கு நிதித் திட்டமிடல் நிச்சயம் அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick