சிக்கலில் வங்கிசாரா நிதி நிறுவனங்கள்... என்னதான் காரணம்?

பங்குச் சந்தை

டந்த 21-ம் தேதியன்று இந்தியப் பங்குச் சந்தைகள் முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி அளித்தன. யாருமே எதிர்பாராத அந்த ஒருசில நிமிடங்களுக்குள் சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்குமேல் சரிந்தது. இந்தியாவின் மிகப் பெரிய, வங்கிசாரா நிதி நிறுவனங்களில் முக்கியமான டி.ஹெச்.எஃப்.எல் (திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம்) சில நிமிடங்களில் 50% அளவுக்குப் பங்கு வீழ்ச்சியைச் சந்தித்தது. நிஃப்டி நிறுவனங்களான, இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ ஃபைனான்ஸ் போன்ற நிதி நிறுவனங்களின் பங்குகளும் பெருமளவு வீழ்ந்தன. இரண்டு வர்த்தக தினங்களில், 15 பெரிய வங்கிசாரா நிதி நிறுவனங் களின் சந்தை மதிப்பு சுமார் ரூ.75,000 கோடி வரை வீழ்ந்தது. சமீபகாலம் வரை, பங்கு முதலீட்டாளர்களின் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருந்துவந்த வங்கிசாரா நிதி நிறுவனங்களின் திடீர் சரிவுக்கான காரணங்கள் என்ன, பல்வேறு சிக்கல்களிலிருந்து அவை மீண்டுவர வாய்ப்புள்ளதா என்று பார்ப்போம்.

வங்கிகளின் வீழ்ச்சியும்,  வங்கிசாரா நிதி நிறுவனங்களின் எழுச்சியும் 

கடந்த பல வருடங்களாகவே, பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் பொதுத்துறை வங்கிகளால் கடன் வழங்க முடிந்ததே தவிர, சிறிய அளவில் கடன்களை வழங்க முடியவில்லை. தவிர, வாராக் கடன் சுமையினால் தவித்துவந்த பொதுத்துறை வங்கிகள் புதிய கடன்களை வழங்குவதற்குத் தேவையான மூலதனத்தையும் திரட்ட முடியவில்லை. இதனால் சமூகத்தின் ஒரு பகுதியினர் நகைக் கடன், கார் கடன், வீட்டுக் கடன் போன்றவற்றை வாங்க முடியாமல் தவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick