பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஷேர் மார்க்கெட்

இண்டெக்ஸ்

இந்த செப்டம்பர் மாதம் முழுவதுமே  இந்தியப் பங்குச் சந்தை முற்றிலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்ததையும், திடீர் சரிவு ஏற்பட்டதையும் நாம் பார்த்தோம். நிஃப்டி முக்கிய சப்போர்ட் லெவலான 10900-ஐ  தக்கவைத்துக் கொள்வதைப் பார்க்க முடியாமல் போனால், வருகிற நாள்களில் சந்தையில் சில நெகட்டிவ் போக்குகள் உருவாகும் என்பதற்கான தெளிவான அறிகுறியாகவே இது இருக்கும். 

 சந்தையில் காணப்பட்ட சீரான போக்கு இந்த மாதத்தில் திடீரென முற்றிலும் தலைகீழாக மாறியதையும், கடந்த சில வாரங்களாக நாம் பார்த்ததைவிட அதிகமாக அதாவது, 900 புள்ளிகளுக்கும் அதிகமாக நிஃப்டி  சரிந்ததையும் பார்க்க முடிந்தது. ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்பட்ட கூடுதல் அழுத்தம், வலுவான ஏற்ற போக்கில் தடையை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick