கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 15 - கடனில் சிக்கவைத்த அப்பா! | Financial management tips for young adults - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/10/2018)

கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 15 - கடனில் சிக்கவைத்த அப்பா!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியம்: ராஜேந்திரன்

வாழ்க்கையில் சிக்கல்களும், சரிவுகளும் எந்தச் சூழ்நிலையிலும் வரலாம். அது தவிர்க்க முடியாதது. சிக்கல் வருகிறபோது, அதிலிருந்து மீள்வதற்கான வழிகளைக் குறித்துத்தான் யோசிக்க வேண்டுமே தவிர, பதற்றப்படுவதால் பயன் இல்லை. ஆனால், வாழ்க்கையின் ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு போதிய வாழ்க்கை அனுபவங்கள் இல்லாமல் இருப்பதால், ஏதாவது சிக்கல், பிரச்னை என்றால் உடனே மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகிறார்கள். குழப்பத்தில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சென்னையைச் சேர்ந்த சந்தோஷ். அவர் தன் மனக் குமறலைக் கொட்டித் தீர்த்தார்.

“நான் நடுத்தர பொருளாதார குடும்பத்தைச் சேர்ந்தவன்.  இன்ஜினீயரிங் முடித்துவிட்டு, ஒரு வருடம் இந்தியாவில் பணியாற்றி வந்தேன். 2018 மே மாதம் முதல் நெதர்லாந்தில் பணிபுரிந்து வருகிறேன். என் வயது 27. என்னுடைய மாத சம்பளம் தற்போது ரூ.1.5 லட்சம். சில மாதங்களில் இன்சென்டிவ் கூடுதலாக வரும்போது ரூ.1.75 லட்சம் வரைக் கிடைக்கும்.  எனது செலவுகள் மாதத்துக்கு ரூ.70 ஆயிரம் வரை ஆகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close