கமாடிட்டி டிரேடிங்! - அக்ரி கமாடிட்டி

மென்தா ஆயில்

மென்தா ஆயில், டிரேடர்களுக்கு ஏற்ற வகையில் வலிமையான ஏற்றங்களையும், இறக்கங்களையும் கொடுத்து வருகிறது.  ஒரு வியாபாரியாக, தாங்கள் வியாபாரம் செய்யும் கமாடிட்டி பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வையும் உங்களுக்கு இருக்கவேண்டும். அதைத்தான் நாம் ‘பிக் பிக்சர்’ என்று அழைக்கிறோம். 

அந்த வகையில் மென்தா ஆயில் விலை நகர்வைப் பார்க்கலாம்.   மென்தா ஆயில் 2017 ஜூன் மாதத்தில் 870 என்ற புள்ளியிலிருந்து ஏற ஆரம்பித்தது. 2017 ஜூலை மாத முடிவில் 1065 என்ற உச்சத்தைத் தொட்டு, அதை உடைக்க முயற்சி செய்தது. இந்த எல்லைதான் அப்போதைய முக்கியமான தடைநிலை ஆகும்.

இந்தத் தடையையும் உடைத்து, 2017 ஆகஸ்ட் மாதத்தில் 1230 வரை சென்றது. அதன்பின், தொடர்ந்து ஏறவும் முடியாமல், இறங்கவும்  முடியாமல் 1065 என்ற ஆதரவையும், மேலே 2030 என்ற தடைநிலையையும் கொண்டு சில காலம் இயங்கியது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்