என்.பி.எஃப்.சி நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்? | NBFCs invest in Mutual fund - What investors should do? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/10/2018)

என்.பி.எஃப்.சி நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

மியூச்சுவல் ஃபண்ட்

ங்குச் சந்தையில் முதலீடு செய்வது, அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காகதான். ஆனால், பங்குச் சந்தைகளில் நாம் செய்யும் முதலீடுகூட சில சமயங்களில் நம் காலை வாரி விட்டுவிடுகிறது. டி.ஹெச்.எஃப்.எல், இந்தியா புல்ஸ், யெஸ் பேங்க் ஆகிய மூன்று நிறுவனப் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் செய்திருந்தன. இதனால், ஃபண்ட்களின் என்.ஏ.வி மதிப்பும் சரிவைக் கண்டிருக்கிறது.

எவ்வளவு முதலீடு?

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி நிலவரப்படி, டி.ஹெச்.எஃப்.எல் பங்குகளில் 15 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ரூ.1,110 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளன. இதர மியூச்சுவல் ஃபண்டுகள் ரூ.546 கோடிக்கு முதலீடு செய்துள்ளன. யெஸ் பேங்க் பங்குகளில் பெரிய மியூச்சுவல் ஃபண்டுகள் ரூ.4,387 கோடிக்கும், இதர மியூச்சுவல் ்ஃபண்டுகள் மொத்தம் ரூ.4,810 கோடிக்கும் முதலீடு செய்துள்ளன.

[X] Close

[X] Close