சி.இ.ஓ பதவி நீக்கம்... என்ன நடக்கிறது ஜி.இ நிறுவனத்தில்?

உலக நிகழ்வு

வ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் வேலை என்பது நிரந்தரம் இல்லை என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஜான் ஃப்ளெனரி (John Flannery). இவர், ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. இந்த நிறுவனத்தின் ஒரு சி.இ.ஓ அந்தப் பதவியிலிருந்து நீக்கப்படுவது இதுவே முதல்முறை.

இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் ஜி.இ-யின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பை ஏற்றார். ஆனால், 14 மாதங்களுக்குள்ளேயே அவரது பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு முன்பு ஜி.இ-யின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஜெஃப் இம்மெல்ட் 16 ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்தார். அவருக்குமுன்பாக இருந்த ஜேக் வெல்ஷ் 20 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்தது குறிப்பிடத்தக்கது. 

ஜான் ஃப்ளெனரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் இயக்குநர் குழுவில் இருந்த லாரம்ஸ் கல்ப் (Lawrence Culp) என்பவரை ஜி.இ-யின் தலைவராக இயக்குநர் குழு நியமனம் செய்துள்ளது. இவர் கடந்த ஏப்ரல் மாதம்தான் ஜி.இ நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இணைந்தார். நூறு ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் ஜி.இ நிறுவனம், ஏற்கெனவே அந்த நிறுவனத்தில் பணி யாற்றியவர்களை மட்டுமே தலைவராக நியமித்து வந்தது. முதல்முறையாக நிறுவனத்துக்கு வெளியே இருந்து தலைமைச் செயல் அதிகாரியை ஜி.இ நிறுவனம் தற்போது நியமனம் செய்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!