யெஸ் பேங்க் மர்மங்கள்... திரை விலகுமா? | Mystery behind YES bank share price crash - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/10/2018)

யெஸ் பேங்க் மர்மங்கள்... திரை விலகுமா?

சர்ச்சை

திர்ச்சி வைத்தியங்களுக்குக் குறைவில்லாத ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரு மாதங்களில், இந்தியாவின் நான்காவது பெரிய தனியார் வங்கியான யெஸ் பேங்கின் பங்கு விலை சுமார் 50% வரை சரிந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளாகி வரும் ராணா கபூர், யெஸ் பேங்கின் தலைவராக நீடிப்பார் என்று அந்த வங்கியின் நிர்வாகக் குழு முடிவெடுத்ததைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பில் கிட்டத்தட்ட சரிபாதியான ரூ.45,000 கோடியைப் பங்கு முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.

இந்த நிலையில், ராணா கபூர் பதவி நீடிக்க அனுமதிக்கக்கூடாது என்று யெஸ் பேங்கின் இரண்டாவது மிகப் பெரிய முதலீட்டாளரும், மறைந்த முன்னாள் நிறுவனர் அசோக் கபூரின் மனைவியுமான மது கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மற்றொரு திருப்பமாக, ரேட்டிங் ஏஜென்சியான கேர் நிறுவனம், இதுவரை யெஸ் பேங்க் விநியோகித்துள்ள சுமார் ரூ.21,000 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை ‘கிரெடிட் வாட்ச்’ எனப்படும் ‘கவனிக்கப்பட வேண்டிய’ பட்டியலில் இணைத்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close