ட்விட்டர் சர்வே: பங்குச் சந்தைகள் இறக்கம்... முதலீடு செய்வீர்களா? | Nanayam Twitter Survey - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/10/2018)

ட்விட்டர் சர்வே: பங்குச் சந்தைகள் இறக்கம்... முதலீடு செய்வீர்களா?

ங்குச் சந்தை சரிவில் இருக்கிறது. நிஃப்டி 10400 புள்ளி களுக்குக் கீழே சென்றால், 10000 புள்ளிகள் அளவுக்குக்கூட இறங்கலாம் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். இந்த நிலையில், நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வீர்களா என்று கேட்டிருந்தோம். இந்த சர்வேயில் பதில் சொன்னவர்களின் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது, முதலீட்டாளர்களின் மனப்போக்கினை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 41% பேர் முதலீடு செய்வேன் என்று சொல்லியிருக்கிறார்கள். பங்குச் சந்தை என்பது ஏற்ற இறக்கத்துடன்தான் இருக்கும். குறித்த காலத்துக்கு ஒருமுறை சந்தைகள் இறக்கம் காண்பதைத் தவிர்க்க முடியாது. இந்த இறக்கம் மோசமான பொருளாதாரத்தின் அடிப்படையில் இருந்தால், அது சரியாகும் வரை பொறுமை காக்கலாம். ஆனால், இப்போது வந்துள்ள இறக்கம் பொருளாதாரத்தின் சில சீர்கேடுகளால் வந்துள்ளது. இது குறுகிய காலத்தில் மட்டுமே இருக்கும் என்கிற நம்பிக்கையில் இவர்கள் ‘முதலீடு செய்வேன்’ என்று சொல்லியிருப்பது பங்குச் சந்தைமீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையையே காட்டுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close