லூமேக்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்! NSE SYMBOL: LUMAXTECH | Company Tracking: Lumax Auto Technologies Ltd - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/10/2018)

லூமேக்ஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட்! NSE SYMBOL: LUMAXTECH

கம்பெனி டிராக்கிங்

டி கே ஜெயின் குழுமத்தின் ஓர் அங்கமாகத் திகழும் லூமேக்ஸ் ஆட்டோ டெக்னாலஜிஸ் லிமிடெட் 1981-ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் லூமேக்ஸ் ஆட்டோ எலெக்ட்ரிக்கல்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இது, இருசக்கர மோட்டார் வாகங்களுக்கான முகப்பு விளக்குகள், இண்டிக்கேட்டர்கள் மற்றும் பின்னால் இருக்கும் சிவப்பு விளக்குகள் போன்றவற்றைத் தயாரிக்கும் நிறுவனமாக மஹாராஸ்டிராவில் உள்ள போஸாரி எனும் இடத்தில் செயல்பட ஆரம்பித்தது.

நிறுவனத்தின் வரலாறு

1988-ல் ஆட்டோ எலெக்ட்ரிக்கல்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது இந்த நிறுவனம். 1997-ல் வாலுஜ் எனும் இடத்தில் உற்பத்தி வசதியைத் துவங்கியது. 2002-ல் மஹாராஸ்டிராவில் உள்ள சகன் எனும் இடத்தில் இரு சக்கர வாகனங்களில் உபயோகப்படுத்தப்படும் பல்வேறு விளக்குகளை உற்பத்தி செய்யும் வசதியை நிறுவியது. 2006-ல் லூமேக்ஸ் டி.கே ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ், இதன் 100% துணை நிறுவனமாக மாறியது. அதே வருடத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் லூமேக்ஸ் ஆட்டோ டெக்னாலஜிஸ் என்று மாற்றப்பட்டு 2007-ல் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது இந்த நிறுவனம். 2007-ல் இத்தாலியைச் சார்ந்த கோர்னக்லியா நிறுவனத்துடன் இணைந்து லூமேக்ஸ் கோர்னக்லியா ஆட்டோ டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்தது. அதே வருடத்தில் மஹாராஸ்டிராவில் உள்ள போஸாரியில் சீட்டுகளுக்கான பிரேம்களை உருவாக்கும் வசதியை நிறுவியது. 

[X] Close

[X] Close