சந்தை இறக்கம் எதுவரை தொடரும்?

பங்குச் சந்தைஏ.கே.பிரபாகர் ஐ.டி.பி.ஐ கேப்பிட்டல் நிறுவனத்தின் ஈக்விட்டி ரிசர்ச் பிரிவின் தலைவர்

ங்குச் சந்தையில் செப்டம்பர் மாதத்தில் காணப்பட்ட தொடர் சரிவு, அக்டோபர் தொடக்கத்திலும் நீடிப்பது, முதலீட்டாளர்களிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. சந்தையின் சரிவுக்கு ரூபாய் மதிப்பின் சரிவு மற்றும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு ஆகிய சர்வதேச மேக்ரோ காரணிகள் முக்கியக் காரணமாக அமைந்த நிலையில், ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்தின் நிதி நெருக்கடி, யெஸ் பேங்க் சிக்கல் போன்றவையும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி, அதை மேலும் சரிவை நோக்கித் தள்ளியது. இந்த நிலையில், ஐ.எல்&எஃப்.எஸ் நிறுவனத்தை மத்திய அரசு கைப்பற்றியதால், சந்தையில் அதன் தாக்கம் மற்றும் அது குறித்த கவலைகள் சற்றுக் குறையத் தொடங்கியிருந்தன.

ஆனாலும், அக்டோபர் 3-ம் தேதியன்று, ஒருபக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 73 ரூபாய் அளவுக்குச் சரிந்த நிலையில், மறுபக்கம் கச்சா எண்ணெய்யின் விலை மீண்டும் அதிகரித்தது முதலீட்டாளர்களிடையே குறிப்பாக, அந்நிய முதலீட்டாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், அன்றைய தினம் முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் விற்று வெளியேறினர். அந்நிய முதலீட்டாளர்கள் மட்டும் சுமார் 1,550 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்