பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/10/2018)

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

த்ரில் தொடர் - 32

வாஷிங்டன் டி.சி

ஏட்ரியனுக்கு கடைசியாக அதிர்ஷ்டம் அடித்தது. ட்வீட் கோட்டில் இருந்த ஒருவனின் முகம் ஸ்கேன் டேட்டாபேஸில் இருப்பது தெரிய வந்தது. உமர் பாரூக், இரண்டாம் தலைமுறை அமெரிக்கர். நியூயார்க்கில் வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறான். மூன்று வருடங்களுக்குமுன் அவனுடைய அப்பா இறந்தவுடன் அவர் செய்த தொழிலைத் தொடர்ந்து செய்கிறான்.

அவனைக் கைது செய்ய இந்த வீடியோ மட்டும் போதாது, ஆனால், மேற்கொண்டு விசாரணை செய்ய இது போதுமானது. கோனே ஐலேண்டின் காபி ஷாப்புக்குச் சென்றதாக உமர் ஒப்புக்கொண்டான். அப்போது அங்கிருந்த நிக்கி டானை மறைந்த செனட்டரின் மனைவி எனத் தெரிந்துகொண்டு அவரிடம் தனது இரங்கலைத் தெரிவித்ததாகக் கூறியதோடு, அவரை கார் இருக்கும் இடம் வரை கூட்டிச் சென்றது ஒரு மரியாதை நிமித்தம்தான் என்றும் சொன்னான். வீடியோவில் ஏ.டி.எம் கொள்ளையர்கள் இவனிடம் ஏதோ சொல்வதுபோல் இருப்பது பற்றியும், விறைப்பாக இருப்பது ஏன் எனவும் கேட்டபோது, பயம்தான் காரணம் என்றான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close