கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 16 - வாழ்க்கையை நரகமாக்கிய இ.எம்.ஐ கடன்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: ராஜேந்திரன்

சிலர் கடன் எங்கெல்லாம் கிடைக்குமோ, அங்கெல்லாம் வாங்கித் தள்ளிவிடுகிறார்கள். பிற்பாடு, வாங்கும் சம்பளத்தில் பெரிய தொகையை  இ.எம்.ஐ-யாகவே செலுத்துகிறார்கள். அதையும் சரியான தேதியில் செலுத்தத் தவறிவிடு கிறவர்கள் ஏராளம். இப்படிப்பட்டவர்களில் ஒருவராகத் தான் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கணேஷ் இருக்கிறார். கைநிறைய சம்பாதித்த அவர், கடன் வலையில் எப்படிச் சிக்கினார் என்பதை அவரே சொல்கிறார்...

“எனக்கு வயது 40. காப்பீட்டுத் துறையில் கடந்த 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறேன். ரூ.80,000 சம்பளம் வாங்கி வந்தேன். அவ்வப்போது குடும்பச் செலவுகளுக்காக வாங்கிய கடன்களுக்கான இ.எம்.ஐ மட்டுமே மொத்தம் ரூ.1.15 லட்சம் வரை கட்டி வருகிறேன். கூடுதலாகச் சம்பாதிக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் நான் செய்துவந்த வேலையைக் கடந்த மாதம் விட்டுவிட்டேன். தற்போது, அதே நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வருகிறேன். இதன் மூலமாகவும், கன்ஸ்யூமர் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றில் எம்.எல்.எம் பிசினஸ் செய்வதன் மூலமாகவும் மாதமொன்றுக்கு ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்க முடியும் என நம்புகிறேன். ஆனால், இந்த வருமானத்தைப் பெற எனது வேலையை மனஉளைச்சல் இல்லாமல் செய்ய வேண்டும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்