உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 7 - சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களை ஜெயிக்க முடியுமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பிசினஸ்...ராமாஸ் கிருஷ்ணன், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆஷ்பயர் இன்ஃபினிட் அண்டு டேப் இண்டியா (Aspire Infinite and TAB India)

மூன்று, நான்கு மாதங்களுக்கொரு முறை, ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங் நடத்தாமல், நகர்ப் புறத்துக்கு வெளியே அமைதியானதொரு இடத்தில் கூட்டத்தை நடத்துவது ‘சவுண்டிங் போர்ட்’-ன் வழக்கம். இந்தமுறை ஞாயிற்றுக் கிழமை காலை, நகர்ப்புறத்துக்கு வெளியே மலையடி வாரத்தில் அமைதியான இடம்நோக்கிப் போனார்கள் ‘சவுண்டிங் போர்ட்’ உறுப்பினர்கள். காக்கைகள் கரைவது தவிர, வேறெந்தத் தொல்லையும் அங்கில்லை.

தனது மனதில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி வந்துபோகும் அந்தக் கேள்வியை அன்றைய கூட்டத்தில் கேட்டுத் தெளிவு பெறுவதென முடிவு செய்து வந்திருந்தான் முரளி. அவன் பேசத் தொடங்கினான்.

‘‘இன்றைக்குப் பெரிய நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்கள் எல்லாமே ஒரு காலத்தில் சிறிய நிறுவனங்களாக இருந்தவையே. நாமும் இப்போது சிறிய அளவில் பிசினஸ் செய்து வருகிறோம். ஆனால், நம்மால் பெரிய நிறுவனங் களுடன் போட்டி போட்டு ஜெயிக்க முடியாதா? அப்படி ஜெயிக்க வேண்டுமெனில், அதற்கான போர்த் தந்திரத்தை (strategy) எப்படி உருவாக்கிக் கொள்வது?’’ என்று தனது கேள்வியைத் தெளிவாக கேட்டு முடித்தான் முரளி. இந்தக் கேள்விக்கான பதில் என்னவாக இருக்கும் என்று எல்லோரும் யோசித்துக்கொண்டிருக்க, எல்லாப் பிரச்னை களுக்கும் தெளிவான விளக்கத்தையும், தீர்வையும் தரும் திரிலோக் பேச ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick