காபி கேன் இன்வெஸ்டிங் - 7 - ஹீரோ என்னும் மாயை!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பங்குச் சந்தை

ம்முடைய பரிணாம வளர்ச்சி நம்மைக் குறுக்குவழியில் சிந்திக்கச் சொல்லித்தந்துள்ளது. மனிதனின் மூளை எவ்வாறு வேலை செய்கிறது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தும் நியூரோ இமேஜிங்கின் உதவியைக்கொண்டு, கடந்த பத்து ஆண்டுகளில் எந்த சுவை கொண்ட ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் என்பது போன்ற ஒரு சாதாரணமான விஷயத்தில் முடிவெடுப்பதற்குக்கூட எந்த அளவு மூளை கடினமாக உழைக்கிறது என்பதை சைக்காலஜிஸ்ட்கள் விளக்கியுள்ளனர். இதுபோன்ற சாதாரண முடிவுகளில்கூட மூளை ஒரே மாதிரியான முடிவுகளைத் தொடர்ந்து எடுப்பதில்லை என்றே கண்டறிந்துள்ளனர்.

பட்டறிவு என்ற ஒன்று இருப்பதால் நாம் சில குத்துமதிப்பான (ஆங்கிலத்தில் தம்ப் ரூல் என்பார்கள்) அளவு கோல்களை வைத்துக்கொண்டு பல முடிவுகளை எடுத்துவிடுகிறோம். இப்படிப்பட்ட குத்துமதிப்பான அளவுகோல்களைக்கொண்டு செயல்படுவதனாலும் மூளை சில குறுக்கு வழிகளைப் பின்பற்றுவதாலுமே எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும் நாம் முடிவுகளைச் சுலபமாக எடுத்துவிடுகிறோம் என்றே சொல்லவேண்டும்.

உதாரணத்திற்கு நாம் ஒரு வேலைக்கு ஆள் எடுக்கிறோம். இரண்டு சரியான நபர்கள் நம் முன்னே வந்து நிற்கின்றனர். இருவரும் ஒரே மாதிரியான திறமைகளைக் கொண்டிருக்கின்றனர். அந்தச் சூழலில் எப்படி நாம் முடிவெடுக்கிறோம் என்றால், இந்தவித குறுக்குவழி செயல்பாட்டு முறைகளால்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick