கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி

கமாடிட்டி

தங்கம் (மினி)

டந்த வாரத்தின் இடையே இந்தியப் பங்குச் சந்தை வலிமையாக இறங்கியது. அதற்கு எதிர்மறையாக தங்கம் ஏறவேண்டுமே என்பது பொதுவான அம்சம். ஆனால், அதற்காகக் காத்திருந்தபோது, கடந்த வாரத்தின் முதல் மூன்று நாள்கள் தங்கம் ஏறாமல் அமைதியாக இருந்துவிட்டு, வாரக் கடைசியில் வியாழனன்று பலத்த ஏற்றத்தைக் காட்டியது பலரையும் ஆச்சர்யப்பட வைத்தது. 

சென்ற வாரம் சொன்னது… “தங்கத்தின் உடனடித் தடைநிலை 31680 ஆகும். இதை உடைத்தால் அடுத்து மிக வலிமையாக ஏறி, 32000 என்ற எல்லையையும் உடைக்கலாம். கீழே 31030 என்பது உடனடி ஆதரவு ஆகும்.”

தங்கம், நாம் கொடுத்திருந்த ஆதரவு நிலையான 31030-ஐ கடந்த வாரம் முழுவதும் தக்கவைத்துக்கொண்டது. கடந்த வாரத்தின் முதல் மூன்று நாள்கள் தங்கம் குறுகிய எல்லைக்குள் சுழன்றது. ஆனால், வியாழனன்று பலமாக ஏறி நாம் கொடுத்திருந்த தடைநிலையான 31680-ஐ வலிமையாக உடைத்து 31815 என்ற உச்சத்தைத் தொட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick