இ.டி.எஃப் & இண்டெக்ஸ் ஃபண்டுகள்... சந்தை ஏற்ற இறக்கத்தில் சரியான முதலீடா?

மியூச்சுவல் ஃபண்ட்

மது பங்குச் சந்தை ரோலர் கோஸ்டர் போல் அதிக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இந்தச் சமயத்தில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நமது பங்குச் சந்தையில் செய்திருந்த முதலீடுகளைத் தொடர்ந்து திரும்பப் பெற்று வருகிறார்கள். ஆனால், அவர்களே எக்ஸ்சேஞ்ச் ட்ரேடட் ஃபண்டுகளில் (Exchange Traded Fund, சுருக்கமாக, ETF) முதலீட்டை அதிகரித்து வருகிறார்கள். அது என்ன இ.டி.எஃப்?

இடிஎஃப் என்றால்..?

இ.டி.எஃப் என்பதன் விரிவாக்கம் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்.  இதனைப் பங்குச் சந்தை  ஃபண்ட் என்று சொல்லலாம். பொதுவாக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை  ஆக்டிவ் ஃபண்ட் மற்றும் பேஸிவ் ஃபண்ட் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஆக்டிவ் ஃபண்ட் என்பது தனிப்பட்ட பங்குகளின் தரத்தை ஆராய்ந்து,   அவற்றில் முதலீடு செய்யப்படுவது. இந்த வகை ஃபண்ட் திட்டங்களை நிர்வகிக்கும் ஃபண்ட் மேனேஜருக்குத் தனித்திறமை வேண்டும். சரியான பங்குகளில் முதலீடு செய்யவில்லை எனில், பெரும் நஷ்டம் வந்துவிடும். எனவே, சந்தையின் ஏற்ற இறக்கத்துக்கேற்ப  சிறப்பாகச் செயல்பட்டு, அதிக வருமானம் தர ஃபண்ட் மேனேஜர் முயற்சி எடுப்பார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick