பண்டிகை பர்ச்சேஸ்... ஸ்மார்ட் ஷாப்பிங் செய்ய சூப்பர் வழிகள்!

ஷாப்பிங்

து பண்டிகைக் காலம். ஆடைகள், பரிசுப்பொருள்கள், வீட்டு உபயோகப்பொருள்களை வாங்கவேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறோம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரும்போது, இன்னொரு நாள் ஷாப்பிங் செய்யலாம் எனத் தள்ளிப்போட முடியாது. அதேவேளை, பண்டிகைக்காலம் முடிந்தபிறகு, அதிகமாகச் செலவழித்துவிட்டோமே என்ற கசப்பான உணர்வைப் பெறவேண்டியிருக்கும். அதற்காக ஷாப்பிங் பட்டியலைக் குறைப்பதைவிட ஸ்மார்ட்டான சில ஷாப்பிங் யோசனைகளைப் பின்பற்றினால் அதிக செலவைக் குறைக்கலாம்.

ஆன்லைன் ஷாப்பிங் செய்யலாம்

இ-காமர்ஸ் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள், இருந்த இடத்திலிருந்தே ஷாப்பிங் செய்வதற்கானவை மட்டுமல்ல, குறைந்த விலையிலும் இங்கே பொருள்களை வாங்க முடியும். உடையோ அல்லது வீட்டு உபயோகப் பொருள்களோ, எதுவானாலும் பண்டிகைக் காலங்களில் ஆன்லைன் ஷாப்பிங்கில் குறிப்பிட்ட சதவிகிதம் தள்ளுபடியில் விற்பனை செய்கிறார்கள். கிரெடிட் கார்டுகள் மற்றும் இ-வாலட்டுகள் மூலம் ஷாப்பிங் செய்யும்போது இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது. கிரெடிட் கார்டுகள் மற்றும் இ-வாலட்டுகளை வழங்குவோர், சில்லறை விற்பனையாளர்களோடு வியாபார ஒப்பந்தம் போட்டிருப்பதால் இது முடிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick