சிக்கல் இல்லாத முதலீட்டு முறை!

நாணயம் விகடன், ஆம்ஃபி இணைந்து மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வுக் கூட்டத்தை சமீபத்தில் மதுரையில் நடத்தின. மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் வி.கோபாலகிருஷ்ணன் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என விளக்கினார். முதலீட்டில், பணவீக்க விகிதத்தைத் தாண்டிய வருமானம் மற்றும் கூட்டு வளர்ச்சி (பவர் ஆஃப் காம்பவுண்டிங்) ஆகிய இரு விஷயங்களைக் கவனித்தாலே அதிக லாபம் பெற முடியும் என்றார் அவர்.

அடுத்து, மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் பி.ராமசாமி பேசினார். “பங்கு சார்ந்த முதலீட்டில் இலக்குத் தொகை வந்துவிட்டால், அதனை பாதுகாப்பான முதலீட்டுக்கு மாற்றுவது அவசியம்” என்றார் அவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick