கச்சா எண்ணெய் விலையேற்றம்...என்ன காரணம்?

ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரசரவென்று உயர்ந்து, இப்போது கொஞ்சம் இறங்கியிருக்கிறது. கடந்த சில மாதங் களாக ஏற்றத்தின் போக்கிலேயே கச்சா எண்ணெய் விலை இருந்தது. கடந்த பிப்ரவரியில் பிரென்ட் கச்சா எண்ணெய்  விலை பேரல் 62 டாலர்களாக இருந்தது. அப்போது உயரத் தொடங்கி, அதிகபட்ச மாக 86 டாலர் வரை சென்றது. இதே வேகத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், பேரல் 100 டாலரை எட்டிவிடும் என்கிற பேச்சுதான் கடந்த வாரம் இருந்தது. அந்தப் பேச்சு வாரத்தின் கடைசியில் கொஞ்சம் குறைந்திருக்கிறது.

விலையேற்றத்திற்கான காரணங்கள்

ஈரான் மீது நவம்பர் 4-ம் தேதி முதல் பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. ஈரான் நாட்டி லிருந்து வர்த்தகத் தொடர்பைத் துண்டித்துக்கொள்ளுமாறு, உலகின் மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா நிபந்தனை விதித்திருப்பது, ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்குப் பெரிய சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளன. இதன் காரணமாக, ஈரான் ஏற்றுமதி செய்யக்கூடிய கச்சா எண்ணெய், சர்வதேச அளவிலான மொத்தத் தேவையில் பங்களிக்க முடியாத சூழ்நிலை உருவாக வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுவதால், விலையேற்றம் என்பது தவிர்க்க இயலாததாகப் பார்க்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick