மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ் லிமிடெட்! (NSE SYMBOL: MAHLIFE)

கம்பெனி டிராக்கிங்

ஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தைச் சார்ந்த நிறுவனம் மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் டெவலப்பர்ஸ்். இது ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் நிறுவனம். மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் ஆறு கண்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில், பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகளில் இருபதுக்கும் மேற்பட்ட தொழில்துறைகளில் வர்த்தகம் செய்துவருகிறது.

நிறுவனத்தின் வளர்ச்சி

 அகில இந்திய ரீதியாக வீடுகளைக் கட்டுமானம் செய்து வரும் மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் நிறுவனம், ‘சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான வீடுகள் கட்டுமானத்தைச் செய்துவருகிறோம்’ என்பதை தன் சிறப்பாகச் சொல்கிறது. 1994-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம்,  20.7 பில்லியன் டாலர் மதிப்பில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் ஈடுபட்டுவரும் நிறுவனம். மஹிந்திரா லைஃப்ஸ்பேஸ் மற்றும் ஹேப்பினெஸ்ட் என்ற இரண்டு பிராண்டுகளில் வீடுகள் கட்டுமானத்தைச் செய்துவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick