எண்ணெய் நிறுவனப் பங்குகளை வாங்கலாமா?

ச்சா எண்ணெய் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்தோடு இருக்கக்கூடியது. எனவே, கச்சா எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு, விற்பனை போன்றவற்றில் ஈடுபடும் எண்ணெய் நிறுவனங்களின் லாபமும், அவற்றின் பங்கு விலையும் ஏற்ற இறக்கத்தோடுதான் இருக்கும். கச்சா எண்ணெய் விலை மாற்ற வரலாற்றைப் பார்த்தால், 1980-ம் ஆண்டில் ஒரு பேரல் விலை 120 டாலர்கள் என்ற உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அதற்குப்பிறகு 2008-ம் ஆண்டில் 148 டாலர்கள் என்ற உச்சத்தையும், 2011-ம் ஆண்டில் 127 டாலர்கள் என்ற உச்சத்தையும், 2013-ம் ஆண்டில் 116 டாலர்கள் என்ற உச்சத்தையும் தொட்டிருக்கிறது. இதிலிருந்து, மூன்றுவிதமான காரணிகள், கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்குக் காரணமாக இருப்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

1. சர்வதேச கச்சா எண்ணெய் விலை

2. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு

3. கச்சா எண்ணெய்க்கான தேவை

ஓ.என்.ஜி.சி நிறுவனம், கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்க மட்டும் செய்கிறது. இது தவிர்த்த மற்ற எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி,    ஹெச்.பி.சி.எல், பி.பி.சி.எல், ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் போன்ற நிறுவனங்கள் பெருமளவு விற்பனையிலும், ஓரளவு சுத்திகரிப்பிலும் ஈடுபடுகின்றன. இதில், சுத்திகரிப்பின்மூலம் கிடைக்கும் லாபத்தை, மொத்த சுத்திகரிப்பு லாபம் (Gross Refining Margin - GRM) என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick