ஷேர்லக்: நீண்டகால முதலீட்டுக்கு ஏற்ற சந்தை!

ஷேர்லக் கேட்டுக்கொண்டபடி நாம் வெள்ளிக்கிழமை காலையிலேயே கேள்விகளை அனுப்பிவைத்தோம். சரியாக மாலை நான்கு மணிக்கு நம் மெயிலுக்குப் பதில்களை அனுப்பிவைத்தார் ஷேர்லக். இனி நம் கேள்விகளும், அவரது பதில்களும்...

கடன் போர்ட்ஃபோலியோ வாங்குவதை எஸ்.பி.ஐ அதிகரித்துள்ளதே?

“தனது கடன் போர்ட்ஃபோலியோவை கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் விரிவுபடுத்த இதுவே நல்ல வாய்ப்பு என எஸ்.பி.ஐ வங்கி கருதுவதால்,  வங்கி அல்லாத நிதி நிறுவனங்களிடமிருந்து நல்ல தரமான போர்ட்ஃபோலியோ சொத்துகளை வாங்குவதற்கான இலக்கை மூன்று மடங்காக்கி உள்ளது. முதலில், நடப்பு நிதியாண்டில்  15,000 கோடி ரூபாய் அளவுக்குக் கடன் போர்ட்ஃபோலியோவை வாங்க திட்டமிட்டிருந்த எஸ்.பி.ஐ, தற்போது அந்த இலக்கை மும்மடங்கு உயர்த்தி, 45,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அக்டோபர் 10-ம் தேதியன்று வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பங்குகள் விலை ஏற்றத்தைச் சந்தித்தன. ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் 14%, பஜாஜ் ஃபைனானஸ் 10.18%, டி.ஹெச்.எஃப்.எல் பங்கு விலை 18% உயர்ந்து காணப்பட்டன. அதேபோன்று ஜே.எம் ஃபைனான்ஷியல் 7.9%, ஐ.ஐ.எஃப்.எல் 3.72% உயர்ந்து காணப்பட்டன. எஸ்.பி.ஐ பங்கு விலையும் உயர ஆரம்பித்துள்ளது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick