நிஃப்டியின் போக்கு: செய்திகளின் மீது கவனம் வையுங்கள்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

டெக்னிக்கல் லெவல்கள் பொய்யாகிப்போய்விடக்கூடிய காலகட்டம் இது என்றும், 10500 என்ற லெவலைத் தக்கவைத்துக்கொள்ள தவறியதால் கொஞ்சம் பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது. 10000 என்ற சைக்கலாஜிக்கல் லெவலைத் தாண்டி வால்யூமுடன் இறங்க ஆரம்பித்தால் அதிகபட்சமாக 9720 என்ற டெக்னிக்கல் லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்றும் கடந்த வாரம் சொல்லியிருந்தோம்.

10138 மற்றும் 10492 என்ற எல்லைகளைத் தொட்ட நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 156 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது. நான்கே டிரேடிங் தினங்களைக் கொண்ட வாரத்தினை எதிர்கொள்ள இருக்கிறோம். 10450 லெவலுக்கு மேல் இரண்டுக்கும் மேற்பட்ட வால்யூமுடன் கூடிய பாசிட்டிவ் குளோஸிங் வந்தால் மட்டுமே இறக்கம் நிற்பதற்கான வாய்ப்பு உண்டு என்று உறுதி செய்துகொள்ளலாம். அவ்வாறு இல்லாமல் மீண்டும் இறங்க ஆரம்பித்தால் 10350 / 10125 போன்ற லெவல்களிலேயே சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick