முதலீட்டு ரகசியங்கள் - 8 - சரியான நிதித் திட்டங்களைத் தேர்வு செய்வது எப்படி?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
முதலீடு

ன்றைய தேதியில் முதலீட்டாளர்கள் சந்திக்கும் மூன்று முக்கிய பிரச்னைகள் என்னென்ன? 1.நிதித் திட்டத்தைத் தேர்வு செய்வது, 2. மற்ற நிதித் திட்டங்களுடன் ஒப்பிடுதல், 3.முதலீட்டுத் திட்டங்களில் எப்போது நுழைவது / வெளியேறுவது என்பது குறித்த சவால்கள். முதலீட்டாளர்கள் சந்திக்கும் இந்தப் பிரச்னைகள் ஒவ்வொன்று குறித்தும் மூன்று பகுதிகளாகப் பிரித்து, விரிவாகப் பார்ப்போம்.

நிதித் திட்டத்தைத் தேர்வு செய்வது

இன்றைக்கு முதலீட்டுச் சந்தையில் நூற்றுக் கணக்கான நிதித் திட்டங்கள் உள்ளன. எளிதான ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் தொடங்கி, சிக்கலான யூலிப் திட்டங்கள் வரை பலவிதங்களில் பல திட்டங்கள் உள்ளன. அத்துடன், அனைத்து வகையான (கட்டுப்படுத்தப்பட்ட அல்லது விருப்பத்துக்கேற்ற வகையிலான) மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், கடன் திட்டங்கள் (வீடு, வாகனம், தனிநபர்), மியூச்சுவல் ஃபண்டுகள், ஈக்விட்டி மற்றும் டெரிவேட்டிவ் டிரேடிங் உள்ளிட்ட பங்குச் சந்தை மூலதனத் திட்டங்கள் போன்றவை நம்முன் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick