பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33 | Worst Bitcoin Scams - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/10/2018)

பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 33

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

மும்பை

வருணும், கேம் மேம்பாட்டுக் குழுவும் மீட்டிங்கில் இருந்த அறைக்குள் கோபத்துடன் ஆதித்யா நுழைந்தார். அறைக்குள் பதினைந்துபேர் இருப்பதைப் பார்த்தவுடன் தனது கோபத்தைச் சிறிது தளர்த்திக்கொண்டு நார்மல் நிலைக்கு வர முயன்றார். “இந்தக் கூட்டம் முடிந்தபின் என்னை வந்து பார்க்க முடியுமா?” எனக் கேட்டார்.

“யெஸ், டாட். ஏதாவது அவசர வேலையா? இந்தக் கூட்டத்தை இப்போதே முடித்துக்கொள்கிறோம். சேவை சம்பந்தமான சில பிரச்னைகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.”

“சேவை?”

“யெஸ். டவுன்ஸ்விலே மொபைல் ஆப் செயலில் இருக்கும்போது போனில் இருக்கும் மற்ற அம்சங்கள் எல்லாம் மிகவும் மெதுவாகச் செயல்படுவதாக நமக்குப் புகார் வந்திருக்கிறது.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close