பிசினஸ்... உங்கள் பிரச்னை, எங்கள் தீர்வு - 8 - ஜெயிக்க வைக்கும் தொழில்முனைவரின் டி.என்.ஏ!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ராமாஸ் கிருஷ்ணன், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர், ஆஷ்பயர் இன்ஃபினிட் அண்டு டேப் இண்டியா (Aspire Infinite and TAB India)

ழக்கமான த்ரி ஸ்டார் ஹோட்டலில் தங்களது ‘சவுண்டிங் போர்டு’ மீட்டிங்கை நடத்துவதற்குப் பதிலாக, இந்தமுறை அந்த ஊரின் ஆற்றங்கரைக்குப் பக்கத்தில் உள்ள தென்னந் தோப்பில் கூட்டத்தை நடத்துவது என்று முடிவெடுக்க, சொன்ன நேரத்தில் உறுப்பினர்கள் எல்லோரும் வந்துசேர்ந்தார்கள். தென்னந் தோப்புக்குச் சொந்தக்காரன் கார்த்திகேயன். பயோ டெக்னாலஜி படித்துவிட்டு, அக்ரோபுட்ஸ் துறையில் தொழில் ஆரம்பித்து, வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறான்.

கூட்டத்துக்கு வந்திருந்த சகதொழில்முனைவர்கள் அனைவருக்கும் முதலில் இளநீரை ஒரு சொம்பு நிறையக் கொடுத்தான் கார்த்திக். இனிப்பாக இருந்த இளநீரை எல்லோரும் விரும்பிச் சாப்பிட, ‘‘ஒரு குடம் நிறைய இளநீரை வெட்டி வெச்சிருக்கேன். தாகம் எடுக்கிறப்ப எல்லாம் வெக்கப்படாம கேட்டுக் குடிங்க’’ என்று சொல்ல, எல்லோரும் ‘‘தாங்க்யூ’’ என்றார்கள்.

இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த இன்னொரு இளம் தொழில்முனைவர் தீபக். தனது மனதில் இருந்த முக்கியமான கேள்வியை அன்றைய கூட்டத்தில் கேட்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். அவன் பேசத் தொடங்கினான்:

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick