ஸ்மால்கேப் ஃபண்டுகளில் நல்ல லாபம் பார்க்கும் வழி!

டாடா மியூச்சுவல் ஃபண்ட் சீனியர் ஃபண்ட் மேனேஜர் சந்திரபிரகாஷ் படையார்

நிதி மேலாண்மையில் சுமார் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர் சந்திரபிரகாஷ் படையார். இவர் டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் மூத்த ஃபண்ட் மேனேஜராக (ஈக்விட்டி) இருக்கிறார். லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட், ஹைபிரீட் ஃபண்டுகளை நிர்வகித்து வருகிறார் இவர். புதிதாக, ஸ்மால்கேப் ஃபண்ட் ஒன்றை நிர்வகிக்க உள்ளார். அண்மையில் சென்னைக்கு வந்த அவர் நமக்களித்த பேட்டி...

லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் ஃபண்டுகளுக்கான வரையறையை செபி அண்மையில் மாற்றி அமைத்திருக்கிறது. இது மியூச்சுவல் ஃபண்ட் துறைக்கு நன்மை அளிக்குமா?

“இவை வரவேற்கதக்க மாற்றம்தான். இதற்குமுன் ஃபண்ட் நிறுவனங்கள் இடையே எவை லார்ஜ்கேப் பங்கு, மிட்கேப் பங்கு, ஸ்மால்கேப் பங்கு என்பதில் குழப்பம் இருந்தது. இப்போது, அந்தக் குழப்பம் இல்லை. ஃபண்ட் முதலீட்டுக்கான பங்குகளைத் தேர்வு செய்வது எளிதாக இருக்கிறது. இதற்குமுன், ஃபண்ட் முதலீட்டாளர்கள், ஒரு ஃபண்டுடன் இன்னொரு ஃபண்டினை ஒப்பிடுவது கடினமாக இருந்தது. அதாவது, ஆப்பிளை ஆரஞ்சுடன் ஒப்பிடுவதாக இருந்தது. தற்போது ஆப்பிளுடன் ஆப்பிளை எளிதாக ஒப்பிடுகிறமாதிரி நிலைமை மாறியிருக்கிறது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick