50 வயதில் ஒரு கோடி ரூபாய் சேர்க்க என்ன வழி?

கேள்வி - பதில்

என் வயது 30. தனியார் துறையில் பணியாற்றும் நான் 50 வயதில் ஓய்வுபெற நினைக்கிறேன். மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு மாதமும்  முதலீடு செய்வதன் மூலமாக ஓய்வுபெறும்போது, ஒரு கோடி ரூபாய் மொத்தத் தொகை சேர்க்க எதில், எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

திருவேங்கடம், சேலம்

ஸ்ரீகாந்த் மீனாட்சி, துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா


“நீங்கள் ஓய்வுபெற இன்னும் இருபது ஆண்டுகள் இருக்கும் நிலையில், இப்போதிருந்தே ஒவ்வொரு மாதமும் 11,000 ரூபாயை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவந்தால், நீங்கள் ஓய்வுபெறும் காலத்தில் ஒரு கோடி ரூபாய் வருமானத்தை எட்ட வாய்ப்புள்ளது. வருடத்திற்கு 12% லாபம் கிடைக்கும் என்ற அனுமானத்தில் இது கணக்கிடப் பட்டுள்ளது. உங்கள் முதலீட்டை பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டுத் தொகுப்பில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ஃப்ராங்க்ளின் இந்தியா ஈக்விட்டி, மிரேஅஸெட் இந்தியா ஈக்விட்டி, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் வேல்யூ டிஸ்கவரி போன்ற ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யவும்.ஒவ்வொரு வருடமும் உங்கள் முதலீடுகளை மறுபரிசீலனை செய்வது அவசியம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick