வெற்றிக்கான 5 தாரக மந்திரங்கள்!

பிசினஸ்

‘டைகான் சென்னை’ அமைப்பின் சார்பில், சென்னையில் அண்மையில் நடந்த 11-வது தொழில் துறை மாநாட்டில்,  ‘Conquering the Idli Business’ என்ற தலைப்பில் பேசிய, இட்லி/தோசை மாவு விற்பனையில் சாதித்துவரும் ஐடி ஃப்ரெஷ்’ (iD Fresh) நிறுவனத்தின் சி.இ.ஓ பி.சி. முஸ்தஃபா, தான் ஜெயித்த கதையை அற்புதமாக எடுத்துச்சொன்னார்.

“கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள சென்னலோடு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். அப்பா ஒரு தினக்கூலி. அவர் சம்பாத்தியத்தில் கைக்கும், வாய்க்குமாக எங்கள் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. தினமும் மூன்று வேளை உணவு என்பது எங்களுக்கு அப்போது கனவாகத்தான் இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து நான் படித்த பள்ளிக்கூடம் வெகு தொலைவில் இருந்தது. ஆனாலும், நான் பள்ளிக்குத் தவறாமல் போகக் காரணம், அரசின் மதிய உணவுத் திட்டம்தான்.

என் செலவுக்குப் பணமில்லாததால், கோடை விடுமுறையின்போது என் மாமாவிடம் 100 ரூபாய் வாங்கி, சின்னதாய் ஒரு மிட்டாய்க் கடை போடுவேன். அதில் கிடைக்கும் லாபம் என் செலவுகளுக்கு உதவியது.
ஆறாம் வகுப்பில் ஃபெயில் ஆனதும் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போகுமாறு என் அப்பா சொன்னார். ஆனால்,  என்னைப் படிக்க அனுமதிக்குமாறு என் கணித ஆசிரியர் மேத்யூ  என் அப்பாவிடம் வலியுறுத்தியதால், நான் ஆறாம் வகுப்பை மீண்டும் படித்தேன்.  ஏழாம் வகுப்பில் முதலாவது மதிப்பெண் எடுத்து எல்லோரையும் ஆச்சர்யப் படுத்தினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick