ஆர்.டி... கவனிக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள்!

சேமிப்பு

வெகுகாலமாகவே ஆர்.டி எனப்படும் தொடர்வைப்புக் கணக்கு நீண்டகால சிறுசேமிப்புத் திட்டங்களின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வந்தது. வங்கி வட்டி விகிதங் களின் வீழ்ச்சி, வட்டியில் வருமான வரி பிடித்தம் கட்டாயமாக்கப்பட்டது மற்றும் எஸ்.ஐ.பி எனப்படும் மாதாந்திர மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் வளர்ச்சி போன்ற காரணங்களினால் தொடர் வைப்புத் திட்டங்களின் மீதான ஈர்ப்பைக் குறைந்துள்ளது. அதேசமயம், வங்கி வட்டி விகிதங் கள் சற்றே உயர்ந்துவரும் சூழ்நிலையில், வருமான வரி குறைவாக உள்ள (அல்லது இல்லாத) சிறு முதலீட்டாளர்களுக்கு இன்னும்கூட தொடர்வைப்புத் திட்டங்கள் பயனுள்ளவையாகவே உள்ளன.

முதிர்வுக் காலம்

எத்தனை வருடங்கள் கழித்து முதிர்வுத் தொகை தேவைப்படும் என்பதைப் பொறுத்து ஆர்.டி கணக்கை 1 முதல் 10 ஆண்டுகள் வரை வைத்திருக்க முடியும். சேமிப்பானது வீடு வாங்குவதற்கா அல்லது பிள்ளைகளின் மேற்படிப்பிற்கா என்பது போன்ற நீண்ட கால இலக்குகளில் நல்ல தெளிவு இருப்பது நலம். நவீன சமூகத்தின் பெருந்தேவையான வருடாந்திரக் கல்வி கட்டணங்களைச் செலுத்த ஓராண்டு ஆர்.டி திட்டங்களில் பங்குபெறுவோரும் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்