நிதி மேலாண்மையில் இளைஞர்கள் எப்படி? - சர்வே முடிவுகள் | How are young people in finance management? - Survey Results - Nanayam Vikatan | நாணயம் விகடன்

நிதி மேலாண்மையில் இளைஞர்கள் எப்படி? - சர்வே முடிவுகள்

சர்வேவி.கோபால கிருஷ்ணன், நிறுவனர், மணி அவென்யூ

பொதுவாக, இளைஞர்களின் மனங்களை அறிந்துகொள்வது ஒரு சவாலான விஷயம்தான். அதிலும் குறிப்பாக, நிதி சார்ந்த விஷயங்களில் இளைஞர்களின் மனங்களைப் புரிந்துகொள்வது சவாலுடன், சிக்கலான விஷயமும்கூட. நிதி சார்ந்த விஷயங் களில் இளைஞர்களின் மனப்போக்கை அறியும் ஒரு முயற்சி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.

உலக நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தியாவில்தான் படித்த, வேலையிலுள்ள அதிக அளவிலான இளைஞர்கள் உள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, 30 முதல் 40 வயதுள்ளவர்கள் மிகவும் அதிக அளவில் உள்ளனர் என்றும் வெவ்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த வயதினர் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு ஒரு மிகப் பெரிய நுகர்வோர் சந்தையாகவே செயல்படுகின்றனர் என்றால் அதில் வியப்பேதுமில்லை.

அதுமட்டுமல்லாது, பல எம்.என்.சி  நிறுவனங்களின் வர்த்தகத்திற்கும் இந்தப் பிரிவினர் ஒரு மிகப் பெரிய சந்தையாக இருக்கும் காரணத்தால், அதுபோன்ற நிறுவனங் களும் இந்தியாவில் கால்பதிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick