ஷேர்லக்: பங்குகளை வாங்கிக் குவிக்கும் ஃபண்டுகள்!

“சபரிமலை விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன..?” - சரியாக மாலை நான்கு மணிக்கு நம் கேபினுக்குள் நுழைந்த ஷேர்லக் வாட்ஸ்அப் செய்தியை வாசித்துக்கொண்டே இந்தக் கேள்வியைக் கேட்டார். “சாமி விவகாரத்தை விடுங்க... சந்தை விவகாரத்துக்கு வாங்க...” என அவரை நம் சப்ஜெக்ட்டுக்கு இழுத்துவந்து, கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம். இனி நம் கேள்விகளும், அவரது பதில்களும்...

ரிலையன்ஸ் பங்கு குறித்து தரகு நிறுவனங்கள் சாதகமான கருத்துகளை வெளியிட்டுள்ளனவே?

“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிகர லாபம் இரண்டாம் காலாண்டில் 17.35% அதிகரித்துள்ளது. இந்த நிறுவன வரலாற்றில், இந்தக் காலாண்டில்தான் இந்த அளவுக்கு அதிக நிகர லாபம் கிடைத்துள்ளது. இந்த லாபம் அதிகரிப்புக்கு ரிலையன்ஸ் ஜியோ மொபைல் போன் மற்றும் பிராண்ட் பேண்டின் சிறப்பான செயல்பாடுதான் காரணம். அதே சமயம், அடுத்த ஆறு மாத காலத்துக்கு இது கட்டாயம் நீடிக்கும் என  டச்சு வங்கி தெரிவித்து உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick