நுகர்பொருள் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாமா?

லகளவில் வேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரங்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. உலகின் எந்த நாட்டிலும்  இல்லாத அளவுக்கு இந்தியாவில் இளம்வயதினர் உள்ளனர். 1980-க்குப்பிறகு பிறந்தவர்கள் இன்று இந்தியாவின் மக்கள் தொகையில் 65% ஆவர். இந்த இளம் வயதினரின் நுகர்வுக் கலாசாரம் நாம் அனைவரும் அறிந்ததே. கார் வாங்குவதிலாகட்டும் அல்லது புல்லட் வாங்குவதாகட்டும் அல்லது லேட்டஸ்ட் ஸ்மார்ட் போன்களை வாங்குவதிலாகட்டும் அல்லது வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பல வகையான உணவுகளை வாங்கிச் சாப்பிடுவதிலாகட்டும் – இந்த வயதினர் பெரும்பங்கு வகிக்கின்றனர்.

இந்தியாவின் மக்கள் தொகை சீனாவை ஒட்டி நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், சீனர்கள் நுகர்வுடன் ஒப்பிட்டால், பல பொருள் களை வாங்குவதில் நாம் அவர்களுக்குப் பக்கத்தில்கூட இல்லை. அமெரிக்கா/ ஐரோப்பிய நாடுகளின் நுகர்வுடன் ஒப்பிடும் போது நாம் வெகுவாகப் பின்தங்கியிருக்கிறோம். உதாரண மாக, வீடுகளில் ஏ.சி வைத்திருக்கும் குடும்பங்கள் அமெரிக்காவில் 88%, சீனாவில் 74% உள்ளன. ஆனால், இந்தியாவில் வெறும் 13% மட்டுமே உள்ளன. இவையெல்லாம் இந்திய நிறுவனங் களுக்கு, வரும்காலத்தில் உள்ள எல்லையற்ற வாய்ப்புக்களைக் காண்பிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick