ஹெல்த் இன்ஷூரன்ஸ்... குழந்தைகளுக்குத் தனியாக எடுக்க வேண்டுமா?

கேள்வி - பதில்

திருமணமான புதிதில் எனக்கும், என் மனைவிக்கும் மட்டும் ஐந்து லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தேன். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டதால், அந்த பாலிசியில் அவர்களையும் சேர்த்துக் காப்பீட்டுத் தொகையை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தலாமா அல்லது அவர்களுக்கு மட்டும் தனியாக இன்ஷூரன்ஸ் எடுக்கலாமா?

சந்திரசேகர், மெயில் மூலமாக

வி.குருநாதன், தலைமை செயல் அதிகாரி,    டி.வி.எஸ் இன்ஷூரன்ஸ்

‘‘நீங்கள் ஏற்கெனவே எடுத்துள்ள ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியில் குழந்தைகளையும் (Dependent children) சேர்த்துக்கொள்ளலாம்.  இதற்காக இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்குக் கொஞ்சம் கூடுதல் கட்டணத்தை நீங்கள்  செலுத்த வேண்டியிருக்கும். அடுத்ததாக, பாலிசியைப் புதுப்பிக்கும்போது கூடுதல் காப்பீட்டுத் தொகையை அந்த பாலிசியின் விதிமுறைகளுக் கேற்ப பிரீமியத்துடன் கூடுதலாகச் சேர்க்கலாம். இந்தச் சேர்க்கை, அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நிபந்தனைக்கு உட்பட்டது. உங்கள் வயது 45-க்கு அதிகமென்றால் மருத்துவப் பரிசோதனை செய்யக்கூடும். அந்தப்  பரிசோதனைக்கான  நிபந்தனைகள் ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் மாறக்கூடும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick