பி.எம்.எஸ் குளறுபடி... எச்சரிக்கை டிப்ஸ்!

பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி, ஹெச்.எஸ்.பி.சி  வங்கியின் பி.எம்.எஸ் (Portfolio Management Service) திட்டத்தில் ரூ.3.6 கோடியை முதலீடு செய்தார். அந்த முதலீட்டுக்கு  24% வருமானம் தருவதாக உறுதியளித்தது அந்த வங்கி. ஆனால், வாக்களித்தபடி வருமானத்தைத் தராததால், தனது பணத்தை மோசடி செய்ததாகக் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் புகார் செய்தார் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி.

அவரது புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணை முடிவில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஹெச்.எஸ்.பி.சி வங்கிக்கு ஒழுங்குமுறை அமைப்பான செபி நோட்டீஸ் அனுப்பியது. ஹெச்.எஸ்.பி.சி வங்கி, வாடிக்கையாளருக்குத் தந்த உறுதிமொழியை மீறி ஏமாற்றிவிட்டதாக அந்த நோட்டீஸில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பாடகி சுசித்ராவின் முதலீட்டில் ஏற்பட்ட இழப்பு ரூ.83 லட்சம் மற்றும் அவரது  முதலீட்டிற்கு கமிஷனாகக் கொடுத்த ரூ.26 லட்சம் என அனைத்தும் கணக்கிடப்பட்டன. தற்போது, இந்தப் பிரச்சனைக்கு இணக்கமான தீர்வு (Amicable Settlement) காணப்பட்டு, இழப்பீடு தரப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick