தமிழுக்கு வந்த தாமஸ் பிக்கெட்டி!

பொருளாதாரத்தை ஆழமாக ஆராய்ந்து எழுதப்பட்ட நூல்கள் தமிழில் மிகக் குறைவாகவே உள்ளன. அந்தக் குறையை நிவர்த்தி செய்கிறமாதிரி தற்போது வெளியாகி யிருக்கிறது தாமஸ் பிக்கெட்டியின் ‘21-ம் நூற்றாண்டில் மூலதனம்’ என்கிற புத்தகம். பாரதி புத்தகாலயம் இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. விலை ரூ.850. இந்தப் புத்தகத்தை எழுதிய தாமஸ் பிக்கெட்டி, பிரான்ஸைச் சேர்ந்த பொருளாதார நிபுணர். பாரீஸின் சமூக அறிவியல் ஆய்வுகளுக்கான உயர்கல்விக் கழகத்தில் (EHESS) பேராசிரியராகவும், பாரீஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். மிகச் சிறந்த பொருளாதாரக் கட்டுரை எழுதிய இவர் ஃபிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சிக்கும், பிரிட்டனின் தொழிலாளர் கட்சிக்கும் பொருளாதார ஆலோசகராக இருப்பதாலோ என்னவோ, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைக்காமலே உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick