வெற்றியைத் தேடித் தரும் 6 அடிப்படை விதிகள்!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர்: தி சிக்ஸ் ஃபண்டமென்டல் ஆஃப் சக்சஸ் (The Six Fundamentals of Success: The Rules for Getting It Right for Yourself and Your Organization)

ஆசிரியர்: ஸ்ட்ராட் ஆர் லீவின் (Stuart Levine)

பதிப்பகம்: Crown Business


வெற்றிக்கான ரகசியங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் நம் எல்லோருக்குமே உண்டு. இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் ‘தி சிக்ஸ் ஃபண்டமென்டல்ஸ் ஆஃப் சக்சஸ்’ என்னும் புத்தகம், வெற்றியைத் தேடித்தரும் ஆறு அடிப்படை வழிகளை உங்களுக்குச் சொல்லித் தரும் புத்தகம் ஆகும். 

‘‘தனிநபரானாலும் சரி, நிறுவனமானாலும் சரி எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும் இந்தக் காலத்தில் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ஸ்ட்ராட் ஆர் லீவின், தன்னுடைய அனுபவத்தில் நூற்றுக்கும் மேலான வெற்றிக்கான விதிகளைக் கண்டறிந்து அவற்றை ஆறு அடிப்படை விதி களாகப் பிரித்துத் தந்திருக்கிறார். அந்த விதிகளைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick