ஷேர்லக்: சி.எல்.எஸ்.ஏ சொன்ன லார்ஜ்கேப் பங்குகள்! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ஷேர்லக்: சி.எல்.எஸ்.ஏ சொன்ன லார்ஜ்கேப் பங்குகள்!

ஓவியம்: அரஸ்

வெள்ளிக்கிழமை காலை தொடங்கி சென்னை பெங்களூராக மாறியிருந்தது. லேசான மழையில் சென்னை நனைந்து, குளுகுளுவென் இருந்தது. வழக்கம்போல மாலை வேளையில் நம் அலுவலகத்துக்கு வந்தார் ஷேர்லக். அவருக்கு ஏலக்காய் டீ போட்டு ஃப்ளாஸ்க் கில் தயாராக  வைத்திருந்தோம். டீயைப் பருகியபடி நம் கேள்வி களுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை அடிப்படை யாகக் கொண்டு சில லார்ஜ்கேப் பங்குகள் குறித்து சி.எல்.எஸ்.ஏ முதலீட்டு நிறுவனம் சாதகமாகக் கூறியுள்ளதைக் கவனித்தீர்களா? 

‘‘ஆமாம், 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முன்னணிப் பங்குச் சந்தை தரகு நிறுவனமான சி.எல்.எஸ்.ஏ   சில கணிப்புகளை வெளியிட்டுள்ளது. 2014-ம் ஆண்டுபோன்று இந்த
முறை பா.ஜனதாவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்றும், கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றும் அது கூறியுள்ளது.

அதேசமயம். மோடி தலைமையில் பா.ஜனதா கட்சி மீண்டும் மத்தியில் ஆட்சி அமைத்தால், வாங்கும் விலையில் வீடுகள் கட்டப்படுவது அதிகரிக்கும். விவசாயிகளின் நலன் குறித்த திட்டங்கள் நன்கு செயல்படும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். கட்டுமானத் துறை வளர்ச்சி காணும் என சி.எல்.எஸ்.ஏ நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, டாபர் இந்தியா, கோத்ரெஜ் பிராபர்ட்டீஸ்,  ஹெச்,டி,எஃப்,சி, இண்டஸ்இண்ட் பேங்க், இன்ஃபோசிஸ், ஐ.டி.சி, மஹிந்திரா அண்டு மஹிந்திரா, மாருதி சுஸூகி மற்றும் சன் பார்மா ஆகிய ஒன்பது பங்குகள் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick