நிஃப்டியின் போக்கு : எஃப் & ஓ எக்ஸ்பைரிக்கு உண்டான மூவ்களையே எதிர்பார்க்கலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

டெக்னிக்கல் லெவல்கள் அடிக்கடி பொய்யாகிப் போகலாம் என்றும், 11450-க்கு மேலேயே தொடர்ந்து வால்யூமுடன் நடந்து வந்தால் 11565 என்ற லெவல்வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது என்ற டெக்னிக்கல் சூழலே தற்போதைக்கு நிலவுகிறது என்றும், ஏதேனும் ஒரு காரணத்தினால் இறக்கம் வந்தால் 11360 என்ற லெவலில் ஒரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் சொல்லியிருந்தோம்.

11620 மற்றும் 11499 என்ற லெவல்களைத் தொட்ட நிஃப்டி, வார இறுதியில் வாராந்திர ரீதியாக 86 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது. ஆகஸ்ட் மாத எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி வாரத்தில் நுழைய இருக்கிறோம்.
எக்ஸ்பைரிக்கு உண்டான மூவ்களையே  பெரும்பாலும் எதிர்பார்க்கவேண்டும். 11540 என்ற லெவலுக்கு மேலேயே வால்யூமுடன் தொடர்ந்து நடந்துவந்தால், 11675 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ள டெக்னிக்கல் சூழல் நிலவுகிறது. இரண்டுக்கும் மேற்பட்ட இறக்கத்துடனான குளோஸிங் வந்தால், இது இந்த வாரத்தில் நடக்காமல் போய்விடலாம். அப்படி வரும்பட்சத்தில் 11480/11385 போன்ற லெவல்களில் ஒரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick