முதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்? | Investment Secrets - Nanayam Vikatan | நாணயம் விகடன்

முதலீட்டு ரகசியங்கள் - 1 - எது சிறந்த வருமானம்?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புதிய தொடர்லலிதா ஜெயபாலன், நிதி ஆலோசகர், moneyvedam. blogspot.in

நாம் முதலீடு செய்வதன் முக்கிய நோக்கமே அதன்மூலம் சிறந்த வருமானத்தைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால், ஒவ்வொரு முதலீட்டிலிருந்து நமக்குக் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பதை நம்மால் துல்லியமாக அளந்து பார்க்க முடிவதில்லை. காரணம், சேமிப்பு அல்லது முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் வருமானத்தை எப்படி அளப்பது என்று நமக்குத் தெரிவதில்லை. அதனால் எது சிறந்த வருமானம் என்று நம்மால் கண்டுபிடிக்க முடிவதில்லை. எனவே, இந்தப் புதிய தொடரில் முதலில் நமக்குக் கிடைக்கும் வருமானத்தைச் சரியாகக் கணக்கிடுவது எப்படி என்று பார்ப்போம்.

வருமானம் என்பது..?

நாம் நமது பணத்தை முதலீடு செய்யும்போது, குறிப்பிட்ட ஒரு தொகையோ அல்லது நமது முதலீட்டின் சதவிகித அடிப்படையிலோ வருமானமாக நமக்குத் திரும்பக் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் வருமானம் சரியாக எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick