காபி கேன் இன்வெஸ்டிங் - 1 - பங்கு முதலீடும், அரசியல் சூழலும்... எந்தத் துறையில் முதலீடு செய்வது?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புதிய தொடர்

நான் 2008-ம் ஆண்டு மே மாதம் அயல்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பியபோது சந்தித்த பலரும், இந்தியாவில் எல்லாமே அருமையான விஷயங்களாக மாறிக்கொண்டிருப்பதாக என்னிடம் சொன்னார்கள். ஒருசில மாதங்களிலேயே அமெரிக்காவில் உருவாகி உலகெங்கும் சென்றடைந்த உலகளாவிய நிதிச் சிக்கலினால் இந்தியாவிலும் பெரியதொரு தாக்கம் உருவானது.

அந்தத் தாக்கத்தின் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தபோது இந்தியாவில் எக்கச்சக்கமான ஊழல் புகார்கள் வெளிவர ஆரம்பித்து, தொழில் துறையில் உற்பத்தி அதிகரிப்பதற்கான முதலீடுகளில் (CapEx) கடுமையான தொய்வு ஏற்பட்டு இன்றைக்கும் அது முழுவீச்சிற்கு வராத சூழலே தொடர்கிறது. பத்து வருடத்திற்குமுன் உற்பத்தி அதிகரிப்பதற்கான முதலீடுகளினால் லாபமடையக்கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள்/நிறுவனங்கள் இன்றைக்கும் அதன் பலாபலன்கள் குறித்துப் பெரிய அளவிலான மகிழ்ச்சிகொள்ள முடியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick