பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ம்ப்யூட்டரை லாக்-ஆஃப் செய்தபோது ஜோஷுக்கு வியர்த்துக்கொட்டியது. இதை எப்படிச் செய்யப்போகிறோம்? ஏற்கெனவே இதுமாதிரியான வேலையொன்றை செய்திருந்ததால்தான், ஏ.டி.எம் கொள்ளைக்கு ஒப்புக்கொண்டார்.  காட்டன் ட்ரைலின் அட்மினாக இருந்தபோது இவர் நன்றாக சம்பாதித்தவர்தான் என்றாலும், ஒருநாள் வேலைக்கு அரை மில்லியன் டாலர் என்னும்போது அதை மறுக்க இயலவில்லை. சாண்ட்டோ டொமிங்கோவில் `சரக்கை’ டெலிவரி செய்ய வேண்டுமென்பது ஒரிஜினல் டீலில் இல்லை. அப்படியிருக்க அந்த வேலையையெல்லாம் எப்படிச் செய்தோம் என்பது அவருக்கே மர்மமாக இருந்தது.

அடுத்த நகர்வு என்ன என்பது பற்றி நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தார். மீதமிருக்கும் பணத்தையும் எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டால் அவர்களால் இவரைக் கண்டுபிடிக்க  முடியுமா? இந்த யோசனைகள் அவர் மனதில் தோன்றிய வேகத்தில் காணாமல் போனது. இவருடைய ஒவ்வொரு அசைவையும் அவர்கள் கண்காணித்துக் கொண்டிருக்கக்கூடும். இவர் உயிரோடு இருக்க வேண்டுமெனில், கொடுக்கப்பட்ட கால அவகாசமான 24 மணி நேரத்திற்குள் பணத்தை எப்படியாவது கண்டுபிடித்துத் தந்துவிட வேண்டும். 

ஆனாலும், தப்புவதற்கு வழி இருப்பதுபோல அவருக்குத் தோன்றியது. காணாமல்போன பணத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால், ஏற்கெனவே செய்ததைவிட ஒரு பெரிய கொள்ளையில் ஈடுபட்டு, பிரச்னையைத் தீர்த்துவிட்டு, கவலைப்படாமல் இருக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்