தமிழகத்தில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... இன்னும் அதிகரிக்க என்ன வழி?

மியூச்சுவல் ஃபண்ட்

ம் நாட்டில் மியூச்சுவல் ஃபண்ட்  நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு சிறப்பாக வளர்ச்சி கண்டுவருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் ரூ.11 லட்சம் கோடியாக இருந்தது கடந்த ஜூலையில் ரூ.24 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்திவரும் மாநிலங்கள் மற்றும் நகரங்கள்தான் தொடர்ந்து அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. கடந்த ஜூலை மாத நிலவரப்படி, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இந்தியா முழுக்க உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மகாராஷ்ட்ரா, டெல்லி, கர்நாடகா, குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 70 சதவிகிதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்களிப்பைக் கொண்டுள்ளன. இது கடந்த 2014-ம் ஆண்டு 73 சதவிகிதமாக இருந்தது.

இந்த ஐந்து மாநிலங்களுடன் ஹரியானா, தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களையும் சேர்த்தால், 84 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன. இது கடந்த    2014-ம் ஆண்டு 85 சதவிகிதமாக இருந்தது. வடகிழக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், ஜம்மு-காஷ்மீர், பீகார், சத்தீஸ்கர், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மூலம் மியூச்சுவல் ஃபண்டுக்கு வரும் முதலீட்டின் பங்களிப்பு வெறும் 3.5 சதவிகிதமாகவே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்