மின் உற்பத்தி நிறுவனங்களின் வாராக் கடன்... என்ன காரணம்? - நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு | Allahabad HC order on power firms regarding bad debt - Nanayam Vikatan | நாணயம் விகடன்

மின் உற்பத்தி நிறுவனங்களின் வாராக் கடன்... என்ன காரணம்? - நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

வாராக் கடன் பிரச்னை

முப்பது மின் உற்பத்தி நிறுவனங்களின் வாராக் கடன் தொடர்பாக அலஹாபாத் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதியன்று அளித்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்திய அரசமைப்பின் முக்கிய அங்கங்களான மத்திய அரசும், மத்திய வங்கியும் கிட்டத்தட்ட நேரடியாக மோதிக்கொண்ட இந்த வழக்கில் வந்திருக்கும் தீர்ப்பினை வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சட்ட, பொருளாதார நிபுணர்களும் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர். 

இந்தத் தீர்ப்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதியன்று வாராக் கடன் தீர்வு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick