கம்பெனி டிராக்கிங்: டைகர் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட்! | Company tracking - Tiger Logistics - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கம்பெனி டிராக்கிங்: டைகர் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட்!

(BSE SECURITY CODE: 536264 / SECURITY ID: TIGERLOGS)

டெல்லியில் 2000-ம் ஆண்டில் வாடிக்கையாளர்களின் சுங்கவரி சம்பந்தப்பட்ட விஷயங்களையும், சரக்குகளையும் (customs house)  கையாளும் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு, படிப்படியாக வளர்ச்சியைச் சந்தித்து, இன்றைக்கு லாஜிஸ்டிக்ஸ் துறையில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் நிறுவனம் டைகர் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட். இந்த நிறுவனத்தைத்தான் நாம் கம்பெனி ட்ராக்கிங் பகுதியில் இந்த வாரம் அலசப் போகிறோம். இந்த நிறுவனம் மும்பைப் பங்குச் சந்தையில் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ள ஒரு நிறுவனமாகும்.

சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிறுவனம்

லாஜிஸ்டிக்ஸ் துறையில் குறைந்த பொருள்செலவில், குறுகிய காலகட்டத்தில் மிகவும் திறம்மிக்கதொரு சேவையை வழங்கும் நிறுவனமே சிறந்த நிறுவனமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், இந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்படுகிறது.

இந்தத் துறையில் ஒரு பிரீ்மியம் ரக சேவையை வழங்குகிற நிறுவனமாக இது இருக்கிறது. இந்தச் சேவைகளை வழங்குவதற்குத் தேவையான இன்டர்நேஷனல் ஃப்ரைட் பார்வர்டர்கள், கஸ்டம் கிளியரன்ஸ் ஏஜென்டுகள், டிரான்ஸ்போர்ட்டர்கள், சுங்க வரி ஆலோசகர்கள்,     புராஜெக்ட் டிரான்ஸ்போர்ட்டேஷன் ஸ்பெஷலிஸ்ட்டுகள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிவருகிறது இந்த நிறுவனம்.

உலக அளவில் சப்ளை செயின் என்பதில் இருக்கும் நுணுக்கங்கள் அனைத்தையும் இந்த நிறுவனம் தெளிவாகத் தெரிந்து வைத்துக்கொண்டுள்ளது தனிச் சிறப்பான விஷயமாகும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick